வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (10:16 IST)

ஸ்மித்துக்கு டாட்டா காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்! – கேப்டன் ஆகும் சஞ்சு சாம்சன்!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தனது கேப்டனை மாற்றியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி ஏப்ரலில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்கான அணிகள் வீரர்கள் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பரிந்துரைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பெயர் கேப்டன் பரிந்துரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பெயர் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய சஞ்சு சாம்சன், ராகுல் தெவாட்டியா உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.