பஞ்சாப் அணியில் இருந்து க்லென் மேக்ஸ்வெல் விடுவிப்பு

maxwell
பஞ்சாப் அணியில் இருந்து க்லென் மேக்ஸ்வெல் விடுவிப்பு
siva| Last Updated: புதன், 20 ஜனவரி 2021 (21:40 IST)
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் போட்டி கொரோனா வைரஸ் பரபரப்பில் முடிந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன
இந்த ஆண்டு மேலும் ஒன்று அல்லது இரண்டு அணிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் பெங்களூர் அணிகள் முக்கிய வீரர்களை விடுவித்ததாக வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

தற்போது வந்துள்ள தகவலின்படி 2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒரு முக்கிய வீரரை விடுவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆக இருந்த கிளன் மேக்ஸ்வெல் என்ற வீரரைப் விடுவித்துள்ளதாக பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆண்டு ஏலம் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :