நான் பாகிஸ்தானுக்காக வரலை.. விராட் கோலிக்காக வந்தேன்! – பாகிஸ்தான் பெண் வீடியோ வைரல்!
நேற்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியை பார்க்க வந்த பெண் தான் விராட் கோலிக்காகதான் மேட்ச் பார்க்க வந்ததாக கூறியுள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான இந்த போட்டிகள் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் புள்ளிகள் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவரிடம் பேட்டி எடுத்தபோது, தான் பாகிஸ்தானுக்காக வரவில்லை என்றும், தனக்கு மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்காகதான் மேட்ச் பார்க்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் தோல்வியடைந்தது தனது இதயத்தை உடைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் #ViratKohli யும் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K