திங்கள், 8 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (20:12 IST)

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

chennai super kings
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் சிஎஸ்கே  அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்கள்.
 
ஆனால், இருவரும் மிகவும் மந்தமான தொடக்கத்தை அளித்தனர். ஆறு ஓவர்களுக்கான பவர் பிளேவில் சிஎஸ்கே வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து, இரண்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
 
ரச்சின் நான்கு ரன்களிலும் கான்வே 12 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்நிலையில், ராகுல் திரிப்பாதி மற்றும் விஜய் சங்கர் தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர்.
 
இதுவரை ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் மிகவும் குறைவாக 30 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சிஎஸ்கே அணியால் முன்பு அடிக்கப்பட்ட ரன்கள் ஆகும்.
 
பவர் பிளேவில் மற்ற அணிகள் 50, 100 ரன்கள் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிஎஸ்கே வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பவர் பிளேவில் 20 டாட் பால்கள் என்பது அணி மிக மோசமாக இருப்பதை தெரிவிக்கின்றது.
 
இதே நிலை தொடர்ந்தால், 150 ரன்கள் கூட அடைய முடியாது என வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva