வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (19:05 IST)

விதியை மீறினாரா விராட் கோலி… பிசிசிஐ எச்சரிக்கை?

இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிட்னெஸ் ஃப்ரீக்காக இருக்கும் கோலி, தன்னுடைய உடலைப் பேணுவதில் ஆர்வமாக இருக்கிறார். தன்னுடைய உடல் பயிற்சி வீடியோக்களை அடிக்கடி சமூகவலைதளங்களில் பதிவிட்டு இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான உடல் தகுதி தேர்வான யோ யோ டெஸ்ட் தேர்வில் கலந்துகொண்டு 17.2 புள்ளிகள் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். ஆனால் பிசிசிஐ விதிகளின் படி யோ யோ டெஸ்ட்டின் முடிவை வெளியில் சொல்லக் கூடாது என்பது பிசிசிஐ விதிமுறைகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. அதனால் விதியை மீறி செயல்பட்ட கோலிக்கு பிசிசிஐ தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.