திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (08:23 IST)

37 வயதில் நிறைவேறிய ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு… மகிழ்ச்சியின் உச்சத்தில் ஜோகோவிச்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஆடவர் டென்னிஸ் போட்டிகளுக்கான இறுதிப் போட்டி நடந்தது. இதில் 37 வயதான ஜோகோவிசி, அல்காரோஸை வெற்றி பெற்று ஒலிம்பிக் தொடரில் முதல் முறையாக தங்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற வயதான வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ஜோகோவிச் மற்றும் அல்கோரஸ் ஆகியோருக்கு இடையே பரபரப்பாக நடந்த இந்த போட்டி சுமார் 2.30 மணிநேரம் நீடித்தது. முதல் செட்டே ஒன்றரை மணிநேரம் வரை சென்றது.  இந்த ஜோகோவிச் ஏழுக்கு ஆறு, ஏழுக்கு ஆறு என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

ஜோகோவிச் இதற்கு முன்பாக 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் பிறகு நடந்த எந்த ஒலிம்பிக்கிலும் அவர் பதக்கம் வெல்லவில்லை.  அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் உள்ள ஜோகோவிச் தற்போது தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.