நள்ளிரவில் ஷாருக்கான் வீட்டை முற்றுகையிட்ட ரசிகர்கள்..என்ன காரணம்?

sharuk
Last Updated: வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:29 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 53வது பிறந்தநாளையொட்டி நள்ளிரவு அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது அயராத உழைப்பாலும், தனித்திறமையாலும் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் தான் ஷாருக்கான். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
 
இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அவரை நேரில் சந்திக்கவும், நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் வந்திருப்பதை அறிந்த ஷாருக்கான் தன் வீட்டின் வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
people
ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :