ஒரு விரல் புரட்சி..! ரசிகர்கள் செய்த அமர்க்களம் ?

Last Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (11:11 IST)
ஒரு விரல் புரட்சி..!  சர்க்கார் படத்திற்காக புதிய முயற்சி! ரசிகர்கள் செய்த அமர்க்களம்
 
விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் ரிலீஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் இதை ஒரு திருவிழா போல் கொண்டாட காத்திருக்கின்றனர். சர்க்கார் படத்தின் ரிலீஸுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. 
 
மறுபக்கம் அப்படத்தின் சாதனைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தையும் தாண்டி கேரளாவிலும் விஜய்க்கு பெரும் ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் இருக்கிறார்கள். 
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் சர்க்கார் படத்தின் பாடல்கள் வெளியாகியது . அதில் ஒரு விரல் புரட்சி பாடல் ரசிகர்களை மிகவும் ஈர்த்த ஒன்று . தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்காகவே  அந்த பாடல் வரியை கொண்டு டிசர்ட் அடித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :