பிரபல தொகுப்பாளினி பாவனா ரசிகர்கள் குஷியோ குஷி ...?

Last Updated: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:13 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சி தொகுப்பாளினி  பாவனா பாலகிருஷ்ணன் ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
 
விஜய் டிவியில் மாகாபா ஆனந்த்துடன்  சேர்ந்து தொகுப்பாளினி பாவனா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.அவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த நிகழ்ச்சி திருவிழா போல் மாறிவிடும். அந்த அளவுக்கு சிவகார்திகேயனுக்கு அடுத்து இவர்கள் தான் அந்த தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைகளாக வலம் வந்தனர்.

 தொலைக்காட்சியை விட்டு பாவனா வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் முற்றிலும்  விலகியே இருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
 
தற்போது அதை பாவனா தனது ட்விட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். இதனால் பாவனாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :