வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (14:46 IST)

நிர்பையா சம்பவம்! சிலிர்க்கவைக்கும் “டெல்லி பஸ்” டிரெய்லர்!

நாடு முழுவதும் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்திய நிர்பையா சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் "டெல்லி பஸ்" இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில்  வெளியாகி மிகப்பெரும் வைரலாகி வருகிறது.
 



டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஓடும் பேருந்தில் அக்ஷய் தாக்கூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேருக்கும் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தனர். 
 
இந்த மிருகத்தனமான கூட்டு பாலியல் வன்கொடுமை, நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தி, பெண்களின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்களை வகுக்க வழிவகுத்தது.
 
இந்த கொடூர உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் "டெல்லி பஸ் " இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வைரலாகி வருகிறது.