புற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பிய சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவு

VM| Last Updated: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:38 IST)
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த போது கடந்த 2002–ல் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதிப்பு  இருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 
 
இதற்காக  அமெரிக்காவில் தங்கி  புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சோனாலி பிந்த்ரே. தலையில் மொட்டை அடித்து சிகிச்சை பெற்ற அவர், தற்போது சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார். 
 
 மும்பை வந்து இறங்கிய சோனாலி பிந்த்ரேவுடன் அவரது கணவர் கோல்டி பெல்லும் வந்தார். 
 
முன்னதாக அமெரிக்காவில் இருந்து மும்பை புறப்படுவதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
 
அதில் ‘‘என் இதயம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டு விட்டேன். இந்த உணர்வை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. எனது நண்பர்கள், குடும்பத்தினரை காண ஆர்வமாக இருக்கிறேன். எனது போராட்டம் முழுமையாக தீரவில்லை என்றாலும் சிறிய இடைவெளி கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி’’ என்று கூறி இருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :