1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (10:08 IST)

சன்னி லியோனுக்கு விருது அளித்து கௌரவப்படுத்திய பீட்டா? ஏன் தெரியுமா

விலங்குகளை பாதுகாக்கவும், அதன் இனம் அழிவதில் இருந்து தடுக்கவும் பீட்டா அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் சன்னி லியோனுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது பீட்டா
 



பீட்டா அமைப்பு ஆண்டுதோறும் விலங்குகள் நலனில் அக்கறை உள்ளவர்களை தூதுவர்களாக நியமித்தும், விருதுகள் வழங்கியும் சிறப்பித்து வருகின்றது.
 
இந்த அமைப்பில் விலங்குகள் மேல் மிகுந்த ஆர்வமுடைய நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
 
இதில் , நடிகை சன்னி லியோனும் இதில் இணைந்தது மட்டுமின்றி, பல முறை விலங்குகளின் பாதுகாப்புக்கான பிரசாரமும் மேற்கொண்டுள்ளார். 
 
இந்நிலையில், பீட்டா அமைப்பில் இருந்து 2018ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அதில் சன்னிலியோனுக்கு 'டிஜிட்டல் ஆக்டிவிசம்' விருது வழங்கப்பட்டது.
 
இது குறித்து சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
"என்னுக்கு அங்கீகாரம் அளித்த பீட்டா அமைப்புக்கு நன்றி. நான் விலங்குகளை காதலிப்பவள், விலங்குகளால் பேச முடியாது, அவற்றுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். 
 
பீட்டா அமைப்பில் நானும் ஒருவராக இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறியுள்ளார்.