வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படலாம்! – இன்றைய ராசி பலன்கள்(21.08.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 


மேஷம்
இன்று  வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும்.  கணவன்- மனைவி யிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. முடிந்தவரை பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்
இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தடைப்படும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாரானமுறையில் நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மிதுனம்
இன்று  உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள்வழியிலும் நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படும் என்பதால் எல்லாவகையிலும் முடக்கங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்
இன்று கணவன்-மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப்பலனை அடையமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிம்மதியற்ற நிலைகளை சந்திப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்
இன்று வீணான போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் அலைச்சல்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கன்னி
இன்று பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசியல்வாதிகள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

துலாம்
இன்று உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியமும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்
இன்று வீடு, மனை வாங்கும் யோகம் யாவும் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துவழியில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.  கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சிலர் வெளியூர் சென்று வர நேரிடும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு
இன்று  உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செரிமானக் கோளாறு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உற்றார்-உறவினர்களின் ஆதரவைப்பெற சில நேரங்களில் அவர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

மகரம்
இன்று  பணவரவுகள் சரளமாக இருப்பதால் கடன்கள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் அமையும். பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடையமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 4, 8

கும்பம்
இன்று கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

 
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். சில நேரங்களில் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள்  மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9