செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (04:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும்!– இன்றைய ராசி பலன்கள்(30.11.2024)!

Astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 


 
மேஷம்
இன்று நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும்.கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை

ரிஷபம்
இன்று  எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நாளிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

மிதுனம்
இன்று வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண்

கடகம்
இன்று சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் நாளிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்

சிம்மம்
இன்று பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். 
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்

கன்னி
இன்று புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.   நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். பெண்களுக்கு: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு

துலாம்
இன்று உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

விருச்சிகம்
இன்று தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

தனுசு
இன்று குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். ஆனால் அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

மகரம்
இன்று இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான நாளிது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்
இன்று மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

மீனம்
இன்று  தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும்.வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்