ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (10:34 IST)

ஜூலை வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு: எங்கு தெரியுமா?

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா பாதிப்புகளும் கண்டறியப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொடர்ந்து தன்னை உருமாற்றி கொண்டே இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.