பிரபல நடிகர் திடீர் மரணம்...சினிமாத்துறையினர் ரசிகர்கள் அதிர்ச்சி

Sinoj| Last Modified சனி, 23 ஜனவரி 2021 (17:01 IST)

சில்லுக் கருப்பட்டி பட நடிகர்
இன்று திடீர் மரணமடைந்தது
ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் ஷமீம் இயக்கத்தில் வெளியான படம் சில்லுக்கருப்பட்டி. இப்படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது.

இப்படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம் கார்வ் மகா. இவர் இஸ்ரேல் தற்காப்புப் கலையில் பயிற்சி பெற்ற நிபுணர். எனவே இவர் தமிழக போலீஸாருக்கு பயிற்சி வழங்கி வந்தார்.

இன்று இவர் தனது இல்லத்தில் மாடியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கீழே விழுந்து விபத்தில் உயிரிழந்தார்.

இவரது மரணம் சினிமாத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :