1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (14:14 IST)

நேரலையில் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீமாக நடந்துக்கொண்ட ட்ரம்ப்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அபோது அவர் செய்த செயல் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 


 
 
டிரம்ப் ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் பின்னர் தற்போது அமெரிக்க திரும்பியுள்ள அவர் நேரலை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தார்.  
 
நிகழ்ச்சியின் போது அவருக்கு திடீர் தாகம் ஏற்பட்தால் தண்ணீர் பாட்டிலை தேடினார். டிரம்பின் உதவியாளர் அவருக்கு உதவினார். 
 
தண்ணீர் பாட்டிலை எடுத்த டிரம்ப் தண்ணீர் குடித்தார். அவர் தண்ணீர் குடிக்க பாட்டிலை வாயின் அருகே கொண்டு வரும்போது உதட்டை நெளித்து பின்னர் தண்ணீர் குடித்தார். 
 
இது சற்று அநாகரீகமாக இருந்தது. டிரம்பின் செயல் பலருக்கு முகத்தை சுளிக்க வைத்தது. இந்த சம்பவம் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
இதற்கு முன்னர் டிரம்ப், செனட் உறுப்பினர் மார்கோரூபியோ தண்ணீர் குடித்தை கேலி செய்திருந்தார். தற்போது இவரும் அதேபோல் செய்துள்ளதால் அமெரிக்க பத்திரிக்கைகள் டிரம்பை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.