டிரம்ப் கட்சியில் சேர எனக்கு அழைப்பு வந்தது: நடிகை கஸ்தூரி


sivalingam| Last Modified வியாழன், 9 நவம்பர் 2017 (17:04 IST)
கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி திமுகவில் சேரவிருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. மேலும் அவர் கமல்ஹாசனை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியதை அடுத்து கமல் ஆரம்பிக்கும் கட்சியில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.


 

இந்த நிலையில் இதுகு'றித்து சமீபத்தில் பேட்டி அளித்த கஸ்தூரி, ' தி.மு.க உள்பட எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுத்து விடாதே? என்று என் மனம் கூறுகின்றது.  அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பதை கெட்டவார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த மாதிரி ஆகிவிட்டார்கள்.

நான் சாதாரண பெண். அரசியல்வாதி கிடையாது. எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை என்று கூறிய கஸ்தூரி பின்னர் நகைச்சுவையாக  ;உன் சேவை எனக்கு தேவை என்று டொனால்டு டிரம்ப் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்' என்று தெரிவித்தார்


 


இதில் மேலும் படிக்கவும் :