சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி நூதன போராட்டம்: அமெரிக்காவில் பரபரப்பு

i
Last Modified வியாழன், 5 ஜூலை 2018 (11:58 IST)
அமெரிக்காவில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி பெண் ஒருவர் டிரம்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த குடியேற்றக் கொள்கையால் மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து அங்கு எல்லையோரங்களில் உள்ள காப்பகங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் 1995 சிறுவர், சிறுமிகள் அங்குள்ள காப்பகங்களில் அடைக்கப்பட்டனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 
 
இதனையடுத்து, டிரம்ப் அத்துமீறி நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து காப்பக்கங்களில் அடைக்க கூடாது என உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில் அமெரிக்காவி்ல் குடியேற்றம் கொள்கையை ஒழிக்க வழியிறுத்து நேற்று பெண் ஒருவர் பிரசித்திப் பெற்ற  சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.
 
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பெண் பிடிகொடுத்து பேசவில்லை. இதன்பின்னர் 4மணி நேரம் கழித்து போலீசாரின் பேச்சுக்கு செவி சாய்த்து அந்த பெண் கீழே இறங்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அந்த விசாரணையில், அப்பெண் டிரம்பின் குடியேற்றக் கொள்கையால் காப்பகங்களில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளை விடுவிக்க கோரியும், சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க கோரியும் சிலையின் மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளது தெரியவந்தது. 


இதில் மேலும் படிக்கவும் :