அடுத்து டிரம்ப், கிம்முடன் சந்திப்பு: கமலை கலாய்க்கும் ஜெயகுமார்!
நடிகர் கம்ல்ஹாசன் அரசியலில் களமிறங்கியதும் அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். தற்போது கமலின் இந்த சந்திப்புகளை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.
பிணரயி விஜயன், நல்லகண்ணு, சீமான் என ஆரம்பித்த கமல் கருணாநிதி, மம்தா பேனர்ஜி, கெஜ்ரிவால், குமாரசாமி என பயணித்து தற்போது ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.
இது அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அவர் பின்வருமாறு பதில் கூறினார். அவர் (கமல்) தாராளமாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரையும் சந்திக்கட்டும். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது. அதனால் எங்களுக்கு கவலையில்லை என்றார்.