திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூன் 2018 (15:02 IST)

டிரம்ப் புகைப்படத்தை வைத்து பூஜை செய்துவரும் இந்திய இளைஞர்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புகைப்படத்தை வைத்து இந்திய இளைஞர் ஒருவர் தினமும் பூஜை செய்துவருகிறார்.

 
தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் கோன் என்ற கிராமத்தைச் சேர்ந்த புஸ்சா கிருஷ்ணா(31) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தினமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புகைப்படத்திற்கு பூஜை செய்து வருகிறார். அவரின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, பொட்டு வைத்து ஆரத்தி எடுத்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்திய வம்சாவளி இளைஞர் அமெரிக்காவில் அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் கிருஷ்ணா டிரம்ப்பிற்கு பூஜை செய்து வருவதாகவும், இதன்மூலம் இந்தியர்கள் பற்றி டிரம்ப் தெரிந்துக்கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.
 
மேலும் டிரம்ப் புகைப்படத்திற்கு பூஜை செய்யும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.