வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (18:43 IST)

வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது: அதிபரின் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது: அதிபரின் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி
சீனா, இத்தாலியை அடுத்து ஸ்பெயின் நாட்டில் மிக அதிகமாக தற்போது கொரோனா வைரஸ் பரவி கொண்டு வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியேறக்கூடாது என அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் ஸ்பெயின் பிரதமரின் மனைவி கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளது உறுதியாகியுள்ளதை அடுத்து அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலைக்குச் செல்வதற்கும் உணவு மற்றும் மருத்துவ காரணங்களுக்கும் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், தேவை இல்லாத வகையில் வெளியே வந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
 
மேலும் 15 நாள் மருத்துவ அவசர நிலை விதிக்கப்படுவதாகவும் ஸ்பெயின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் பிரதமரின் மனைவியே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஸ்பெயின் பிரதமரின் மனைவியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது