வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜூன் 2018 (11:24 IST)

சவுதி அரேபியாவில் பெண்கள் இன்றுமுதல் கார் ஓட்டலாம்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.
 
இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.