ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூன் 2018 (10:45 IST)

அடப்பாவிங்களா ஒரு மாம்பழத்துக்காக சின்ன பையன சுட்டுக்கொன்னுட்டீங்களே டா

பீகாரில் மாம்பழம் பறித்ததற்காக ஒரு சின்னப் பையன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக் கட்டத்தில் பல மனிதர்களிடம் மனிதம் மறுத்துப் போய்விட்டது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றாமல் செல்பி எடுப்பதும், சின்ன சின்ன விஷயங்களுக்காக கொலை செய்வதும் போன்ற மனிதமற்ற செயல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
 
இந்நிலையில் பீகார் மாநிலம் ககாரியா நகரில் உள்ள மாந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த சிறுவன், தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது அந்த தோப்பின் காவலாளி அந்த சிறுவனை நோக்கி சுட்டுள்ளான்.
இதில் தலையில் குண்டு பாய்ந்து, சிறுவன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.