ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (15:19 IST)

படம் வெற்றி பெற சாமி தரிசனம்: படகுழுவோடு சென்ற சூர்யா!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் சாயிஷா நாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். 

 
இந்த படத்தில், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா ஆகியோர் நடித்துள்ளனர். விவசாயத்தை பெருமைபடுத்தும் படமாக இது உருவாகிறது.
 
தமிழில் கடைக்குட்டி சிங்கம் எனவும், தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. தமிழில் இசை வெளியீட்டு விழா நடந்த முடிந்த நிலையில், தெலுங்கில் நடைபெறவுள்ளது. இதனால் படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். 
 
எனவே, ஆந்திராவில் பிரபலமான சிமாசலம் வராக லட்சுமி நரசிம்ம கோவிலில் கார்த்தி, சூர்யா, சூரி, பாண்டிராஜ் ஆகியோர் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்கள்.