புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (10:08 IST)

உடலுறவின் போது ஏமாற்றம்: படுக்கையில் விபரீத முடிவெடுத்த டாக்டர்

ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உடலுறவின் போது அடைந்த ஏமாற்றத்தால், அவர் உடலுறவு கொண்ட நபரை கொன்று சமைத்து உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர், ஒரு பெண்ணை டேட் செய்து வந்தார். சம்பவ நாளன்று இருவரும் வெளியே சென்றுவிட்டு பின்னர் மருத்துவரின் வீட்டிற்கு வந்தனர். இருவரும் மது அருந்திய பின்னர் உடலுறவுகொள்ள முற்பட்டனர். 
 
ஆனால், அப்போதுதான் அந்த மருத்துவர் டேட் செய்தது பெண் அல்ல திருநங்கை என தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் படுக்கையிலேயே அந்த திருநங்கையின் கழுத்தை நெறித்து கொன்றார். 
 
இருப்பினும் ஆத்திரம் அடங்காததால், திருநங்கையின் உடலை பல துண்டுகளாக வெட்டி, அதில் சிலவற்றை சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் போலீஸுக்கு தெரியவர அந்த டாக்டர் கைது செய்யப்படுள்ளார். மேலும் அந்த டாக்டருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.