திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (15:45 IST)

பிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை – மருத்துவர்கள் அறிவுரை !

விஜயகாந்தின் உடல்நிலை பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை என அவரது மருத்துவக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்த்  சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.இதனையடுத்து மனைவி பிரேமலதாவுடன் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கேப்டனின் உடல்நலக்குறைவால் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மனமுடைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது விஜயகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆறுதல் படுத்தி  வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் பிப்ரவரி 16ந் தேதி சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர் தொண்டர்கள். ஆனாலும் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை இதுவரை சந்திக்கவில்லை. தேர்தல் கூட்டணி விஷயத்தில் தேமுதிகவின் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் கடுமையாக சொதப்பிய போது கூட விஜயகாந்த் அமைதியாகவே இருந்தார்.

அதன் பின் ஒருவழியாக அதிமுக கூட்டணியில் 4 சீட்டுகளை மட்டுமே பெற்ற தேமுதிக இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது. அது குறித்து பதிலளித்த பிரேமலதா ‘விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார்’ எனக் கூறினார். விஜயகாந்த் பிர்ச்சாரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை எனவும் அவர் இப்போதுதான் கொஞ்ச கொஞ்சமாக உடல்நலம் தேறிவருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.