புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (12:03 IST)

மருத்துவரின் மட்டமான செயல் : சிக்கித்தவித்த செவிலியர்கள்!!!

திருவாரூரில் மருத்துவர் ஒருவர் 15 நர்சுகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வூரை சுற்றியுள்ள மக்கள் ஏராளமானோர் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இங்கு மணவழகன் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
 
மணவழகன் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 செவிலியர்கள் இவனின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் இருந்துள்ளனர்.
 
ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த இவர்கள் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அந்த மருத்துவர் நர்சுகளிடம் அத்துமீறியது தெரிய வந்தது. 
 
இதையடுத்து இதுகுறித்து மணவழகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் மணவழகனை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.