வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (19:25 IST)

டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளினார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர்களை இன்று பின்னுக்கு தள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்களை கொண்ட அரசியல்வாதி என்பதில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
 
பிரதமர் மோடியை அடுத்து இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ அவர்கள் இன்ஸ்டாகிராமில் 25.6 மில்லியன் ஃபாலோயர்களையும், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 24.8 மில்லியன் ஃபாலோயர்களையும் வைத்துள்ளனர்.
 
அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில் 65.7 மில்லியன் ஃபாலோயர்களையும் பிரதமர் மோடி 50.7 மில்லியன் ஃபாலோயர்களையும் கொண்டுள்ளனர். விரைவில் டுவிட்டரிலும் டிரம்ப்பை மோடி முந்திவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.