வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (18:24 IST)

எதிர்க்கட்சியினர்களுக்கு இந்த துணிவு இருக்கின்றதா? பிரதமர் மோடி சவால்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதுகுறித்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் மத்திய அரசு பெரிய எதிர்ப்பின்றி நிறைவேற்றியது
 
இந்த சிறப்புப்பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக எம்பிக்கள் டெல்லி வரை சென்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்து, எந்தவித எதிர்ப்பும் இல்லாதவாறு மத்திய அரசு பார்த்துக் கொண்டது.
 
இந்த நிலையில் தற்போது படிப்படியாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று முதல் செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவைகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: காஷ்மீரில் 370வது பிரிவை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா? காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புஅந்தஸ்து கொண்டு வர நாட்டுமக்கள் அனுமதிப்பார்களா? எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் என்று ஆவேசமாக பேசினார்.