ஆக்ஸ்போர்டு பல்கலையின் மரியாதையை இழந்தாரா ஆங் சாங் சூகி?


sivalingam| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (07:13 IST)
மியான்மர் நாட்டின் அரசு ஆங் சாங் சூகி அவர்களின் ஆலோசனையில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்க தவறியதால் அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இதுவரை வழங்கி வந்த மரியாதையை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது


 
 
ஆங் சாங் சூகி லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார படிப்பை முடித்தார். இந்த கல்லூரி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருப்பதால் இக்கல்லூரி நிர்வாகம் அவருக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அவருடைய புகைப்படத்தை கல்லூரியில் கடந்த 1999ஆம் ஆண்டு வைத்தது
 
இந்த நிலையில் மியான்மரில் ரோஹிங்கா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறியதால் அந்த படத்தை பல்கலை நிர்வாகம் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆங் சாங் சூகி அவர்களின் வேறு புதிய படத்தை வைக்கவே பழைய படத்தை நீக்கியுள்ளதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :