காஞ்சனா 3 படத்தில் ஓவியா; வைராலாகும் புகைப்படம்

Sasikala| Last Modified வியாழன், 28 செப்டம்பர் 2017 (17:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவை பல படங்களில் நடிக்க வைக்க திரையுலகினர் முயற்சி செய்து வருகின்றனர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து', காட்டேரி போன்ற படங்களில் நடிப்பதாக செய்தி வெளியானாலும், அவை உறுதி செய்யப்படாத தகவல்களாக உள்ளது.

 
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். கடந்த சில நாட்களாக  ஓவியா இந்த நடிகர் படத்தில் கமிட்டானார், அந்த புதிய படத்தில் நடிக்கிறார் என நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஓவியா நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
 
அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். தற்போது ஓவியா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :