செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (20:30 IST)

அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறையாக இறங்கி வந்த வடகொரியா

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ள தென்கொரியா செல்லும் வடகொரியா உயர் மட்ட குழு அங்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது.

 
நீண்ட கால பகையை கடந்து தென் கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தென்கொரியா சென்றது குறிப்பிடத்தக்கது.
 
வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியது. வடகொரியாவின் செயலால் மூன்றாம் உலகக் போர் ஏற்படும் என்று அச்சத்தில் இருந்தனர். அமெரிக்கா சார்ப்பில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் வடகொரியா பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று கூறிவந்தது . இந்நிலையில் குளிர் கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் வடகொரியாவின் உயர் மட்ட குழு அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது.