அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

school
Last Modified வியாழன், 15 பிப்ரவரி 2018 (13:04 IST)
அமெரிக்காவின்  ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர்.


புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டியிலுள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு பள்ளியிலிருந்து வெளியே ஓடினர். நிகோலஸ் டி ஜீசஸ் க்ரூஸ் என்ற கொடூரன் ஏஆர்-15 வகை சார்ந்த சக்தி வாய்ந்த துப்பாக்கியைக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தினான். அவனை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

இந்நிலையில் பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். நடந்த கொடூர சம்பவங்களை சில மாணவ, மாணவிகள் செல்போன் மற்றும் லேப்டாப்பில் பதிவு செய்து அவற்றை சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :