வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (14:25 IST)

நிலாவில் மீண்டும் கால் பதிக்க காத்திருக்கும் நாசா

பல வருடங்களுக்கு பின் நாசா நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.


 

 
நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி முதலில் வெற்றகரமாக திரும்ப கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல தோல்விகளுக்கு மத்தியில் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிக்கரமாக 1980ஆம் ஆண்டு மனிதர்களை அனுப்பி வெற்றிப்பெற்றது.
 
இதையடுத்து நிலாவுக்கு செல்ல நாசா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. செவ்வாய் கிரகத்தில் மட்டும் நாசா ஆராய்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளும் நிலவில் ஆய்வு மேற்கொள்ள முன்வரவில்லை.
 
இந்நிலையில் பல வருடங்களுக்கு பின் நாசா நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ள நாசா, அதன் முன்னோட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
 
இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் கூறியதாவது:-
 
இந்த முறை கொடியை மட்டும் நட்டுவிட்டு வரும் பயணமாக இருக்காது. இனி நடக்க போகும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் இதுதான் தொடக்க புள்ளியாக இருக்க போகிறது என்றார்.