இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் உயிரிழப்பு


Abimukatheesh| Last Updated: திங்கள், 2 அக்டோபர் 2017 (16:03 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 
அமெரிக்காவின் மேண்டலே பே ஒட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ரசிகர்கள் இசை ரசித்துக்கொண்டிருந்த நேரத்துல் உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 
 
இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் 20பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்தை அடுத்து மெக்கரன் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நகரின் அனைத்து சாலைகளும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :