Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிங்கத்தின் வாய்க்குள் சிக்கிய சிறுமியின் தலை: வைரல் வீடியோ!

Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (22:12 IST)
சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் வசந்தவிழா நடக்கும். இந்த விழாவின் போது அந்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், பொழுதுபோக்காக பல விளையாட்டுகளும் நடைபெறும். 
 
இந்த ஆண்டு நடந்த விழாவில் சிங்கக்குட்டி அடைக்கப்பட்ட கூண்டிற்குள் சிறுவர்களை விளையாட அனுமதித்தனர். இந்த விளையாட்டை குழந்தைகளும் ஆர்வத்துடன் விளையாடினர். 
 
அவர்களுடன் சிங்கத்திற்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் உள்ளே இருந்தார். இருப்பினும் சிங்கக்குட்டி திடீரென ஒரு சிறுமியின் தலையை கடித்தது. பின்னர் பயிற்சியாளர் கடின போராட்டத்திற்கு பிறகு சிறுமியை மீட்டார்.

சிறுமி சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பல எதிர்ப்பிற்கு பின் விலங்குகள் பயிற்சியாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :