திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 மார்ச் 2018 (17:01 IST)

பெரியார் வெறும் சிலை அல்ல ; முடிந்தால் தொட்டுப் பாருங்கள் - தீபா ஆவேசம்

பெரியாரின் சிலையை அகற்றுவோம் என கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
வடஇந்திய மாநிலமான திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து திரிபுராவில் உள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என்று பதிவிட்டார்.  
 
ஹெச்.ராஜாவின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எச்.ராஜா கருத்துக்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா கருத்தும் பாஜகாவும் சம்பந்தமில்லை என்று கூறி நழுவிவிட்டார். அந்நிலையில், ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ஸ்டாலின்,வைகோ,சீமான், குஷ்பு உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 
 
இந்நிலையில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா ? 
 
வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்...சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை...இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்...” என அவர் பதிவிட்டுள்ளார்.