வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (10:53 IST)

சிறுமியை உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர்( வைரலாகும் வீடியோ காட்சி)

வட இந்தியாவில் பிரபல ரியாலிட்டி ஷோவில் நடுவர் ஒருவர் சிறுமியை உதட்டில் முத்தமிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சிறுவர்கள் பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான ஜுனியர் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியை போல வட இந்தியாவில் பிரபலமான நிகழ்ச்சி வாய்ஸ் இந்தியா கிட்ஸ்.
 
தங்களின் திறமையை வெளிகாட்ட ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் வாய்ஸ் இந்தியா கிட்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஷான், ஹிமேஷ் ரேஷ்மியா மற்றும் பாடகரும், இசையமைப்பாளருமான பாபன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர்.
 
விரைவில் ஹோலி பண்டிகை வருவதையொட்டி, இசையமைப்பாளர் பாபன் பேஸ்புக் நேரலையில் நிகழ்ச்சியில் பங்குபெறும் சிறுவர் சிறுமியருடன் ஹோலியை கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது பாபன் ஒரு சிறுமியின் முகத்தில் வண்ணப்பொடியைத் தடவி, சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்தார். இதனை எதிர்பாராத அந்த சிறுமி செய்வதறியாது திகைத்தார்.
 
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பாபன் மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.