திருமணம் ... 3 நிமிடம் கழித்து விவாகரத்து – குவைத்தில் வினோத ஜோடிகள் !

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (14:56 IST)
குவைத் நாட்டில் திருமணமான மூன்றே நிமிடங்களில் தம்பதியினர் நீதிபதி முன் விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ள வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம் என்றப் பந்தத்திற்குள் நுழைந்து விட்டதாலேயே தம்பதிகள் காலம் முழுவதும் சேர்ந்து வாழவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதனால் இந்த நவீன காலத்தில் திருமணம் என்பதும் விவாகரத்து என்பதும் சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.

அதேப் போல கல்யாணமாகி சில வருடங்களிலோ அல்லது சில மாதங்களிலோ ஏன் சில வாரங்களிலோ கூட விவாகரத்து நடந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் திருமணம் நடந்த அன்றே அதுவும் திருமணம் நடந்த மூன்றே நிமிடங்களில் விவாகரத்து நடந்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்புள்ளாக்கியுள்ளது.

குவைத்தைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அந்நாட்டு சட்டத்தின் படி நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கணவர், மனைவியை ’முட்டாள்’ என்று திட்டியுள்ளார்.

இதனால் கோபித்துக்கொன்ட அந்தப் பெண் தங்களுக்குத் திருமணம் நடத்திவைத்த நீதிபதியிடமே விவாகரத்து வழங்குமாறுக் கேட்டுள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவ்வள்வோ வற்புறுத்தியும் பிடிவாதமாக இருந்த அந்தப் பெண் விவாகரத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் உலகிலேயே குறைந்த நிமிடங்கள் மட்டுமே தம்பதியாக வாழ்ந்தவர்கள் என்ற மோசமான சாதனையை குவைத் தம்பதியினர் பெற்றுள்ளனர்.

அந்தப் பெண்ணின் இந்த செய்கைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்து கிடைத்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :