மடியில் மகன், கழுத்தில் தாலி! சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (11:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணம் இன்று லீலா பேலஸில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை ஜோதிடர்கள் குறிப்பிட்ட சரியான நேரத்தில் விசாகன், செளந்தர்யாவின் கழுத்தில் மந்திர வேதங்கள் முழங்க, தாலி கட்டினார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விசாகன் தாலி கட்டும்போது செளந்தர்யாவின் மகன் வேத் அவரது மடியில் உட்கார்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் மணமகனை போலவே மகன் வேத் பட்டு வேஷ்டி அணிந்திருந்தார் என்பதும் இந்த திருமணத்திற்கு வந்திருந்த பலரின் பார்வை வேத் மீதே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :