சேரனின் திருமணத்தை சென்சார் செய்த அதிகாரிகள்

Last Updated: சனி, 9 பிப்ரவரி 2019 (08:44 IST)
நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் சேரன் இயக்கி வரும் திருமணம்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
பாரம்பரிய திருமண பழக்க வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்போதைய திருமணம் நவநாகரீக முறையில் நடந்து வருவதை இந்த படம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்ததோடு, படத்தில் எந்த காட்சியையும் கட் செய்யாமல் முழுமையாக திரையிட அனுமதித்துள்ளனர்.


சேரன், சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படததிற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில், பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ல இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :