1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (14:13 IST)

ரூ.7 லட்சத்துக்கு வாங்கியும் போதையே இல்லை; சீன எழுத்தாளர் வழக்கு

லண்டனில் ரூ.7 லட்சத்துக்கு வாங்கி மது குடித்தும் போதை இல்லை என சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டல் மது வகைகளுக்கு சிறப்பு பெற்றது. இங்கு உலகிலேயே மிக அதிகமான விலை உயர்வான மதுவகைகள் கிடைக்கும். இந்த ஓட்டலில் மிக குறைந்த விலை மது வகை ரூ.2 லட்சத்துக்கு மேல்தான்.
 
இந்நிலையில் சீன எழுத்தாளர் ஒருவர் ரூ.7 லட்சத்துக்கு மது வாங்கி குடித்துள்ளார். அந்த மது 1878ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அதாவது ஆங்கிலத்தில் இதுபோன்ற மதுவகைகளை பிளண்டட் என குறிப்பிடுவர். எத்தனை ஆண்டுகள் பழமையானதோ அதற்கு ஏற்ப விலை அதிகமாகும். 
 
இந்நிலையில் அவருக்கு மது குடித்து சிறிய அளவில் கூட போதை ஏறவில்லை. எனவே மீதம் இருந்த மதுவை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்துள்ளார். அதில் அவர் குடித்தது போலியான மதுபானம் என தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து அவர் அந்த ஓட்டல் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து அந்த ஓட்டல் நிர்வாகம் அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளது.