மழை பாதிப்புக்கு மோடியிடம் ரூ.1500 கோடி நிதி கேட்ட தமிழக முதல்வர்

Edappadi Palanisamy
Abimukatheesh| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (15:44 IST)
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கியதாகவும், சீரமைக்க ரூ.1500 கோடி நிதி கேட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
 
டெங்கு காய்ச்சல் வேறு மழை வெள்ள சேதம் வேறு. வயல்களிலும், ஏரிகளிலும் வீடு கட்டியதால்தான் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாக கூறினார். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினை படிப்படியாகத்தான் அகற்ற முடியும். 
 
பிரதமரிடம் வெள்ள சேதம் குறித்து 30 நிமிடங்கள் கேட்டறிந்தார். மழை வெள்ள சேதத்திற்கு ரூ.1500 கோடி நிதி கேட்டிருக்கிறோம். மழை வெளத்திற்கு நிவாரண நிதி அளிப்பதாக மோடி ஊறுதியளித்துள்ளார் என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :