Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிங்கிள் ரேட் எக்ஸ்ட்ரா பலன்: ஏர்டெல் புதிய வியூகம்....


Sugapriya Prakash| Last Modified திங்கள், 6 நவம்பர் 2017 (10:18 IST)
ஏர்டெல் நிறுவனம் வருமானத்தில் சரிவை சந்தாலும் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டு மீண்டும் பழைய நிலைமைக்கு வர பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 

 
 
இதற்காக ஜியோ போன்று பல சலுகைகளை அறிவித்து வருகிறது. சில சலுகைகள் ஜியோ சலுகைகளின் காப்பியாகவே உள்ளது. அந்த வகையில், ரூ.448-க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஏர்டெல் திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
 
புதிய ஏர்டெல் திட்டத்தின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இது எல்லா பயனர்களுக்கும் பொருந்தும் அதாவது 3ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட்போன் என்ற பாகுபாடின்றி அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த திட்டம் பொருந்தும்.
 
வாய்ஸ் கால் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான டேட்டா வரம்பை மீறினால், டேட்டா வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :