Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

Last Modified புதன், 14 பிப்ரவரி 2018 (19:40 IST)
சீனாவில் பொருட்களை சோதனை செய்யும் சாவடியில் உள்ள எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் தன்னுடைய பையுடன் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் டோங்குவான் நகரின் ரெயில் நிலையத்தில் பொருட்களை சோதனை செய்யும் சாவடியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பெண் ஒருவர் தன்னுடைய பை
கையை விட்டு போக கூடாது என்பதற்காக அவரும் சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்தில் சென்றுவிட்டார். இது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு வீடியோவாக மீடியாக்களில் வெளியானது. இந்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். டுவிட்டரில் இதுதொடர்பான செய்திகள் கேலியுடன் பகிர்வு
செய்யப்பட்டு வருகிறது. பணத்தைவிடவும் உயிர் பெரியது எனவும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :