அமைச்சர் தொகுதியிலேயே அடிக்கடி நடக்கும் விபத்துகள் - வீடியோ

Last Modified புதன், 14 பிப்ரவரி 2018 (16:30 IST)
கரூர்  கோவை தேசிய நெடுஞ்சாலையில்  ஈரோடு  கோவை சாலைகள் பிரியும் முனியப்பன் கோவில் அருகே  ரவுண்டான இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. அந்த பகுதியில் கனங்கள் அதிவேகமாகவே வந்து செல்கிறது.

 
மேலும் அருகிலேயே அரசுப்பள்ளியும் செயல்பட்டு வரும் நிலையில், திருப்பூர், கோவையிலிருந்து வரும் வாகனங்களின் தடமும், ஈரோடு வழியே வரும் தடமும் ஒன்றாக இணையும் பட்சத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன என்றும், ஆகவே ரவுண்டானா ஒன்றை விரைவில் அமைக்க வேண்டுமென்று இதே தொகுதி மற்றும் பகுதியை சார்ந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், உடனே நடவடிக்கை எடுத்து துறை ரீதியான நல்ல வேலைகளை துவக்கினால் மேற்கொண்டு உயிர்பலி தொடராது என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-சி.ஆனந்த குமார்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :