திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (14:38 IST)

சிங்கிள்ஸை மிங்கிள் ஆக செய்யும் காதல் ரயில்!! – ஆஹா என்ன ஒரு திட்டம்!?

சீனாவில் திருமணமாகாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு இடையே காதலை ஏற்படுத்துவதற்காக புதிய ரயில் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனா.

உலக பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி பெற்றுவரும் சீனாவில் திருமணமாகாத இளைஞர்கள், பெண்கள் 200 மில்லியன் பேர் இருக்கிறார்களாம். பலரும் கல்வி, வேலை என பிஸியாக திரிவதால் காதலிக்க நேரமில்லாமல் போய் விடுகிறதாம். ஒருவொருக்கொருவர் நெருங்கி பேசி கொள்ளாததாலேயே பலரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள்ஸாக சுற்றி வருகின்றனர்.

அவர்களை காதல் வயப்படுத்த சீனா செய்திருக்கும் முயற்சிதான் “காதல் ரயில்”. இந்த ரயிலில் 1000 பேர் வரை பயணிக்கலாம். சோன்கிங்கிலிருந்து கியாங்ஜியாங் வரை 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் இந்த ரயிலில் உணவகம், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு பகுதி என பல்வேறு அம்சங்களும் உள்ளன. இந்த மூன்று நாள் பயணத்தில் அதில் பயணிக்கும் பெண்கள், ஆண்கள் ஒருவருக்கொருவர் பேசி பழகி பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த ரயிலில் பயணிக்க ஏக கிராக்கி, தவிர சிங்கிள்ஸ்க்கு மட்டுமே இந்த ரயிலில் அனுமதி. வருடத்திற்கு ஒருமுறை செயல்படும் இந்த ரயில் கடந்த மூன்று வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறதாம். Y999 என்ற பெயர் இந்த ரயிலுக்கு இருந்தாலும் மக்கள் இதை காதல் ரயில் என்றே அழைக்கின்றனர்.

இந்த முறை ஆகஸ்டு 10ம் தேதி தொடங்கி முடிந்த இந்த காதல் ரயில் சேவையால் 10 ஜோடிகள் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனராம். இந்த சம்பவம் கேள்விப்பட்ட நமது நாட்டு 90ஸ் கிட்ஸ் இதுபோன்ற சேவைகள் நமது நாட்டில் இல்லாம போச்சே என்று வருந்தி மீம்ஸ் போடுகிறார்களாம்.