செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (19:04 IST)

’ஒரு வயது ’குழந்தையை ஓங்கி உதைத்த கொடூரன் .. பரப்பரப்பு சம்பவம்

சீனா நாட்டில் உள்ள ஒரு வணிகவளாகத்தில் 1 வயது பேரனுடம் சென்றார் ஒரு பாட்டி. அவர் அங்கு இருக்கையில் அமர்ந்திருக்க, சின்னகுழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த ஒருவர் குழந்தையை கொடூரமாக உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா நாட்டில்  உள்ள ஷென்சென் மாகாணத்தில், ஒரு பாட்டி, தன் ஒரு வயது பேரனுடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்றார். அங்கு அவர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. 
 
அப்போது ஒருவர் வந்து, குழந்தை என்றும் பாராது, கொடூரமாக உதைத்துவிட்டு சென்றார். இதைப் பார்த்த பாட்டி, அவரை ஏன் இப்படி குழந்தையை உதைக்கிறாய்  ?என கேட்டார். அதற்கு அந்த ஆசாமி பாட்டியையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வணிகவளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் ஆய்வுசெய்து குற்றவாளியை தேடிவருவதாக செய்திகள் வெளியாகிறது.