செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (15:06 IST)

முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி போன்களின் சேவை!

ஒரு காலத்தில் ஆப்பிள் போன்களுக்கு நிகரான பிரபல்யத்தைக் கொண்ட செல்போன் நிறுவனமாக இருந்தது பிளாக்பெர்ரி.

செல்போன்கள் கீபோர்டு வசதியுடன் இருக்கும் காலத்தில் பிளாக்பெர்ரி போன்கள்தான் மிக முக்கியமான செல்வாக்கை சந்தையில் செலுத்தின. ஆனால் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்தபோது பிளாக்பெர்ரி தனது வரவேற்பை இழக்க தொடங்கியது. இதையடுத்து அவர்கள் புதிய மாடல்களை உருவாக்கியதில் இருந்து பின் வாங்கின. இந்நிலையில் இப்போது மொத்தமாக செல்போன் உற்பத்தியை பிளாக்பெர்ரி நிறுவனம் முழுவதுமாக நிறுத்திவிட்டதாம்.